Re:...மினி காவல் நிலையம் இந்த ஊரை விட்டு அகற்றப் படவே வேண்டும் posted bymackie noohuthambi (kayalpatnam )[23 March 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46084
இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் 4 வது பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஒரு செய்தி வந்துள்ளது அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் செய்தி அது.
95 சத வீத வழக்குகள் காவல்துறை அத்துமீறல் தொடர்பானவை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கலாகும் வழக்குகளில் 95 சத வீத வழக்குகள் காவல்துறை அத்துமீறல் தொடர்பாகவே இருக்கிறது என்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார் என்று அந்த செய்தி தொடர்கிறது.
நமதூரில் மினி காவல் நிலையம் அமைத்திருப்பதற்கு தப்பி தவறி யாராவது ஆதரவாக இருந்தால் அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வது நல்லது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று சொல்வார்களே அந்த கதைதான் இது. தவறுகள் உச்ச கட்டத்தை அடையும் முன் சுதாரித்துக் கொள்வோம்.இந்த விஷயத்தில் நடப்பதென்ன என்ற குழுமம் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனம் திறந்த ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
காவலர்கள் தொல்லையால் காயலர்கள் அவஸ்தைப் பட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. எனது நிலைப்பாட்டை முந்தின பதிவுகளில் தெரிவித்துள்ளேன்.
வயது முதிர்ந்தவர்கள் களத்துக்கு வந்து போராட முடியாது. இளைஞர்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். விழித்துக் கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் பிரயோஜனம் தராது என்று தமிழில் சொல்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross