Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:07:32 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20304
#KOTW20304
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 23, 2018
காவல் சாவடி: DSP நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3096 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் காவல்துறை கண்காணிப்புச் சாவடி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அளித்த கோரிக்கை நடவடிக்கைக்காக திருச்செந்தூர் வட்ட காவல் துணை கண்காணிப்பாளருக்கு (DSP) அனுப்பப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

காயல்பட்டினம் பேருந்து நிலையம் வாயிலில் கடந்த வாரம் - காவல்துறை சாவடி ஒன்று நிறுவப்பட்டது. காவல்நிலையம் இல்லாத ஊர் என்ற பெயர்பெற்ற இவ்வூரில், பேருந்து நிலையம் வளாகத்தின் வெளியில் காவல்நிலையம் சாவடி நிறுவப்பட்டது - பொது மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பாதுகாப்பினை உறுதிப்படுத்த, குற்றங்களை குறைத்திட ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவல்நிலையம் / காவல்துறை சாவடி இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும், நகரின் பாரம்பரியத்திற்கும் மதிப்பளித்து இச்சாவடியை அகற்றிட கோரி, மார்ச் 12 திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்ட மனு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SUPERINTENDENT OF POLICE) திரு மஹேந்திரன் அவர்களின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது.

திருச்செந்தூர் வட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) திரு திபு அவர்களின் தொடர் நடவடிக்கைக்காக மனு அனுப்பப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.



இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: மார்ச் 23, 2018; 2:30 pm]
[#NEPR/2018032301]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மினி காவல் நிலையம் இந்த ஊரை விட்டு அகற்றப் படவே வேண்டும்
posted by mackie noohuthambi (kayalpatnam ) [23 March 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46084

இன்றைய தமிழ் ஹிந்து நாளிதழில் 4 வது பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் ஒரு செய்தி வந்துள்ளது அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் செய்தி அது.

95 சத வீத வழக்குகள் காவல்துறை அத்துமீறல் தொடர்பானவை மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கலாகும் வழக்குகளில் 95 சத வீத வழக்குகள் காவல்துறை அத்துமீறல் தொடர்பாகவே இருக்கிறது என்று தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தெரிவித்தார் என்று அந்த செய்தி தொடர்கிறது.

நமதூரில் மினி காவல் நிலையம் அமைத்திருப்பதற்கு தப்பி தவறி யாராவது ஆதரவாக இருந்தால் அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்வது நல்லது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்று சொல்வார்களே அந்த கதைதான் இது. தவறுகள் உச்ச கட்டத்தை அடையும் முன் சுதாரித்துக் கொள்வோம்.இந்த விஷயத்தில் நடப்பதென்ன என்ற குழுமம் எடுக்கும் முயற்சிகளுக்கு எனது மனம் திறந்த ஆதரவை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

காவலர்கள் தொல்லையால் காயலர்கள் அவஸ்தைப் பட்ட அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. எனது நிலைப்பாட்டை முந்தின பதிவுகளில் தெரிவித்துள்ளேன்.

வயது முதிர்ந்தவர்கள் களத்துக்கு வந்து போராட முடியாது. இளைஞர்கள்தான் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். விழித்துக் கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் பிரயோஜனம் தராது என்று தமிழில் சொல்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved