காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 23 அன்று 04ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ தமிழ் உலமாக்கள் சபை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ நிகழ்த்தினார்.
குடிநீரின் மகத்துவம், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், குடிநீரை விற்பனை செய்வதன் கேடுகள் உள்ளிட்ட தகவல்கள் குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 05ஆம் நாள் (மார்ச் 24) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://ustre.am/jI41 என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது. |