காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 27 அன்று 08ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ நிகழ்த்தினார்.
குடும்ப உறவுகள், அண்டை வீட்டாருடன் இருக்க வேண்டிய முறைமைகள், கணவன் – மனைவியிடையே இருக்க வேண்டிய உறவுகளை வலியுறுத்தும் தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 09ஆம் நாள் (மார்ச் 28) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனரும், அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|