காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 30 அன்று 11ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
அமானிதப் பொருட்களைப் பாதுகாத்தல், அடுத்தவர் உரிமைகளைப் பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 12ஆம் நாள் (மார்ச் 31) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் வஹ்ஹாப் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|