காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 28 அன்று 09ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனரும், அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
கஷ்டப்படுவோருக்குக் கடன் வழங்குவதன் சிறப்பு, பெற்ற கடனைத் திருப்ப வழியில்லாதோருக்கு அவர்களின் தவணையை நீட்டித்தோ அல்லது கடனைத் தள்ளுபடி செய்தோ உதவல், ஏழைகளுக்கு உதவுவதற்கென பைத்துல் மால் கருவூலத்தை எல்லாப் பகுதிகளிலும் ஏற்படுத்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 10ஆம் நாள் (மார்ச் 29) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|