காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 29 அன்று 10ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மாதிஹுல் ஜலாலிய்யா மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.ஜெஸீமுல் பக்ரீ ஃபாஸீ ஃபாழில் ரஷாதீ நிகழ்த்தினார்.
கடன் பட்டோருக்கு உதவல், உறவுகளுக்கிடையில் ஒற்றுமை, பிறர் உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 11ஆம் நாள் (மார்ச் 30) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் ஜெ.ஏ.தாவூத் மாஹின் மஹ்ழரீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|