காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 31 அன்று 12ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, குமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜும்ஆ பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் வஹ்ஹாப் மஹ்ழரீ நிகழ்த்தினார்.
அண்ணலாரின் தனித்துவங்களை உணர்த்தும் தகவல்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.
ரஜப் 13ஆம் நாள் (ஏப்ரல் 01) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எல்.யு.ழியாவுத்தீன் அல்புகாரீ வழங்குகிறார்.
இமாம் இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கைச் சரித உரையை, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீ மவ்லவீ எஸ்.டீ.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ நிகழ்த்துகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது. |