சிங்கப்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில், காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியின் மாணவி, தொடர்ந்து இரண்டு முறை முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். விரிவான விபரம்:-
சிங்கப்பூர் இஸ்லாமிய தலைமையகமான MUIS சார்பாக, சிங்கப்பூர் தேசிய அளவிலான திருக்குர்அன் மனனப் போட்டி, 25.02.2018 அன்று நடைபெற்றது.
வயது அடிப்படையில் பல பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவருமான ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன் உடைய மகளுமான ஹாஃபிழா எம்.எஸ்.உம்மு உமாரா பங்கேற்றார்.
அந்நாட்டின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர்கள் பங்குபெற்ற இப்போட்டியில், சிங்கப்பூர் அல்ஜுனைத் அல்இஸ்லாமிய்யா பள்ளியின் சார்பில் கலந்துகொண்ட இம்மாணவி, முதலிடம் பெற்றதாக, 25.03.2018 அன்று MUIS சார்பில் நடத்தப்பட்ட விழாவில் அறிவிக்கப்பட்டார். இச்சாதனைக்காக அவருக்கு சாம்பியன் கோப்பை, கேடயம் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு நடைபெற்ற போட்டியிலும் இவரே சாம்பியன் கோப்பையை வென்றமை குறிப்பிடத்தக்கது.
சாதனை மாணவி எம்.எஸ்.உம்மு உமாரா, காயல்பட்டினம் அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலருமான மர்ஹூம் எஸ்.ஏ.பீர் முஹம்மத் அவர்களின் மகன் வழிப் பேத்தியும், காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்தவரும் – ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீயின் மகள் வழிப் பேத்தியுமாவார். இவர் காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக் கல்லூரியில் திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசுப் பொருட்களுடன் – மாணவியின் தந்தை ஹாஃபிழ் பீ.எம்.முஹம்மத் ஸர்ஜூன்...
|