தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவு கோரி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுடன், திருச்செந்தூர் வட்டார போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவரும் தூத்துக்குடி நகரில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையை இழுத்து மூடக்கோரி போராட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துவருகின்றன.
திருச்செந்தூர் வட்டார ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பில் - ஏப்ரல் 3 செவ்வாயன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு கோரி - நடப்பது என்ன? குழும நிர்வாகிகளை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், இன்று நகரில் சந்தித்தனர்.
ஏப்ரல் 3 செவ்வாயன்று மாலை 4 மணி அளவில் திருச்செந்தூர் பகத் சிங் பேருந்து நிலையத்திலிருந்து பேரணி புறப்பட்டு, திருச்செந்தூர் தேரடி திடலை அடைகிறது. அங்கு - மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 1, 2018; 11:00 pm]
[#NEPR/2018040101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|