காயல்பட்டினம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் தொடர் முயற்சியின் பலனாக, அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக 2 மருத்துவர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்த கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் செய்து வருகிறது.
முதல் கட்டமாக - அங்கீகரிக்கப்பட்ட நான்கு மருத்துவர்கள் எண்ணிக்கையில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசின் மருத்துவத்துறையின் அனைத்து கட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனை விளைவாக - சில மாதங்களுக்கு முன்பு, மூன்று காலியிடங்களில் இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட்டன. தற்போது காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் மூன்று மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள்.
நீண்ட நாட்களாக காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள மற்றொரு காலியிடம் - காட்டப்படாமல் இருந்தது. நடப்பது என்ன? குழுமம் இது குறித்து தொடர்ந்து மனுக்கள் வழங்கியதை அடுத்து, சில வாரங்களுக்கு முன்பு - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஒரு காலியிடம் உள்ளது என்பதை அரசு மருத்துவத்துறை அறிவித்தது. விரைவில் இந்த காலியிடமும் நிரப்பப்படவுள்ளது என சென்னையில் உள்ள மருத்துவத்துறை அதிகாரிகள் நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
இதற்கிடையே - மகப்பேறு மருத்துவர் (DGO) உட்பட கூடுதல் ஒரு நிபுணர் மருத்துவர் என இரு மருத்துவர்களை காயல்பட்டினம் அரசு மருத்துவனைக்கு அங்கீகரிக்க - நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது. அதன் பயனாக - கடந்த நவம்பர் மாதம், நடப்பது என்ன? குழுமத்திற்கு பதில் வழங்கியிருந்த DMS டாக்டர் இன்பசேகரன் - நடப்பது என்ன? குழுமத்தின் மனுவின்படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக இரு மருத்துவர் அங்கீகரிக்க அரசுக்கு, பிரேரணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக - தூத்துக்குடியில் உள்ள சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் டாக்டர் பரீதா ஸீரீன் அவர்களை நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் இன்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது - காயல்பட்டினம் அரசு மருத்துவனைக்கு - மகப்பேறு மருத்துவர் உட்பட கூடுதலாக ஒரு நிபுணர் மருத்துவர் பொறுப்புக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும், 2 - 3 மாதங்களில், மருத்துவர்கள் நியமனம் செய்யப்படலாம் என்றும் தெரிவித்தார். இதன் விளைவாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் எண்ணிக்கை 4 இல் இருந்து 6 ஆக உயர்ந்துள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 2, 2018; 7:00 pm]
[#NEPR/2018040205]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|