காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு – ஒரு வழிப்பாதையாக்கப்பட்டு, பேருந்து போக்குவரத்திற்கு வழிவிடப்பட்டதையடுத்து, அத்தெருவில் தரமான தார் சாலை அவசியம் என்ற நிலை உருவானது. இதனையடுத்து, அங்கு நகராட்சியின் சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் கடந்து செல்லும் சாலை என்பதால், இச்சாலையின் ஓரங்களில் அடிக்கடி சிதைவு ஏற்பட்டது. இதனைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், அச்சாலையின் இரு ஓரங்களிலும் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
|