இதுவரை 110 முறை குருதிக் கொடையளித்துள்ள காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நடத்தும் குருதிக் கொடை முகாமில் 3ஆவது முறையாக மீண்டும் குருதிக் கொடையளிக்கவுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் குத்துக்கல் தெருவை சார்ந்த கானி எம்.ஏ. முஹம்மது மொஹிதீன் அவர்கள் திருச்சியில் வசித்து வருகிறார்கள். 110 முறைக்கும் மேலாக இது வரை இரத்த தானம் செய்துள்ள இவர், நடப்பது என்ன? குழுமம் ஏற்பாட்டில் ஏப்ரல் 2017 மற்றும் அக்டோபர் 2017 ஆகிய மாதங்களில் நடைபெற்ற முகாம்களில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தார்.
இறைவன் நாடினால் - ஏப்ரல் 4 அன்று நடைபெறவுள்ள இரத்த தானம் முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 2, 2018; 2:15 pm]
[#NEPR/2018040103]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|