04.04.2018. அன்று, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில், ரசாக் மருத்துவமனையில் நடத்தப்படவுள்ள குருதிக் கொடை முகாமில் கலந்துகொள்ளும் கொடையாளர்களை ஊக்குவிக்க அரசு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நடப்பது என்ன? குழும ஒருங்கிணைப்பில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி ஏற்பாட்டில் - ஏப்ரல் 4 புதனன்று, காலை 9:30 மணி முதல் மாலை 3 மணி வரை, இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் இரத்தினபுரியில் அமைந்துள்ள ரஜாக் மருத்துவமனை வளாகத்தில் இறைவன் நாடினால் நடைபெறவுள்ள இந்த இரத்த தான முகாமில் பங்கேற்க முன் பதிவு தற்போது நடைபெற்றுவருகிறது.
இந்த முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்யும் கொடையாளர்களை ஊக்குவிக்க அரசு முத்திரையிட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 2, 2018; 7:00 am]
[#NEPR/2018040101]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|