காயல்பட்டினம் கொச்சியார் தெருவின் நடுப்பகுதி – மழைக்காலங்களில் பெருமளவில் நீர் தேங்கும் பகுதியாகும். இக்குறையைப் போக்கிட, அத்தெருவில் புதிய சாலை அமைக்கும்போது, நீர் தேங்கும் பகுதியை அளந்து, சிறப்புக் கவனம் செலுத்தி, அப்பகுதியை மேடாக்கி சாலை அமைக்க கடந்த நகர்மன்றப் பருவத்தில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன், இத்தெருவின் தண்ணீர் தேங்கும் அந்நடுப்பகுதியின் இரு ஓரங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு நடுப்பகுதியில் மட்டும் துண்டாக சாலை அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
தோண்டப்பட்ட பள்ளத்தில் அடுத்தகட்டப் பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையில், சுமார் 3 நாட்களுக்கும் மேலாக – அத்தெருவைக் கடந்து செல்வோருக்கும், அப்பகுதி மக்களுக்கும் அப்பள்ளம் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
“நகராட்சியின் நேர்ச்சைப் படி விபத்து நடந்த பிறகு, போர்க்கால அடிப்படையில் ஏதாச்சும் செய்வாங்க போல!” என அப்பகுதி மக்கள் நக்கலாய்த் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
படங்களில் உதவி:
S.அப்துல் வாஹித்
|