காயல்பட்டினம் நெய்னார் தெருவிலுள்ள ஃகைரிய்யா பெண்கள் தைக்காவில் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் பிரிவு நேற்று (02.04.2018. திங்கட்கிழமை) 12.00 மணிக்குத் துவக்கப்பட்டது.
நகரப் பிரமுகர் தாஜுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் – மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, மார்க்க அறிஞர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எஸ்.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, நகரப் பிரமுகர்களான என்.எஸ்.நூஹ் ஹமீத், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், கே.எம்.செய்யித் அஹ்மத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிராஅத், வரவேற்புரையைத் தொடர்ந்து, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனர் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
திருக்குர்ஆன் மனனப் பிரிவில் புதிதாக இணைந்துள்ள மாணவியருக்கு பாடம் துவக்கி வைக்கப்பட்டது. நன்றியுரை, துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கே.எம்.டீ.சுலைமான் ஒருங்கிணைப்பில், குழுவினர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் அமீர் & K.M.T.சுலைமான்
|