சஊதி அரபிய்யா - ஜித்தாவில் இயங்கும் காயல் நற்பணி மன்றத்தின் 110 வது செயற்குழு ஜித்தா ஷரஃபிய்யாவிலுள்ள இம்பால உணவக கூட்டரங்கில் கடந்த 16.03.2018 வெள்ளியன்று இனிதே நடந்தேறியது. அதன் விபரம் வருமாறு:.
சரியாக மாலை 07:30 மணிக்கு துவங்கிய செயற்குழுவிற்கு மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது தலைமை ஏற்றார். சகோ.M.I.அரபி முஹம்மது ஷுஐபு இறைமறை ஓதினார். சகோ.M.N.முஹம்மது ஷமீம் அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
மன்றம் நகர் மக்களின் துயர் துடைக்க தொய்வின்றி செய்துவரும் நற்பணிகளின் போற்றுதலை தலைமையுரையாக தந்தார் மருத்துவர் முஹம்மது ஜியாது.
மன்ற செய்லபாடுகள்:
சென்ற பிப்ரவரியில் சிறப்பாக நடந்து முடிந்த "காயலர் மனமகிழ் சங்கமம்" குறித்த நிகழ்வுகளையும், அதன் பிறகு மன்றத்தின் மூலம் நடந்தேறிய பணிகளையும் சுருக்கமாக சொல்லி அமர்ந்தார் செயலர் சகோ.S.A.சட்னி செய்யிது மீரான்.
"நம் காயல் நற்பணி மன்றங்களின் மூலம் உதவிகள் பெற்று நல்ல நிலையில் இருப்போர் நமக்காக செய்யும் பிரார்த்தனைகள் இன்னும் வீரியமாக நம் பணிகளை முன்னெடுக்க உத்வேகமளிக்கிறதென்றும்" மேலும், "இக்ரஃ" கல்வி சங்கத்தின் நம் மன்ற பங்களிப்பு குறித்தும் ஏனைய மன்ற நடப்புகள் குறித்தும் எடுத்துக்கூறினார் செயலர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம்.
"இக்ரஃ" கல்வி சங்கத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் அதன் தற்போதைய நிலை போன்ற மேலதிக விபரங்களை சமூக ஊடகத்தின் அசைபடநிகழ்வில் கலந்து கருத்துக்களை பகிர்ந்ததை செய்தியாக்கினார் சகோ.Y.M.முஹம்மது ஸாலிஹ்.
நிதி நிலை:
நடந்து முடிந்த காயலர் மனமகிழ் சங்கம நிகழ்வில் பெறப்பட்ட சந்தாக்கள், அன்பளிப்புக்கள் மற்றும் மன்றத்தின் தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கான விடுப்பு, மீதமிருப்பு என நிதி தொடர்பான விபரங்களை பட்டியலிட்டார் சகோ.M.S.L.முஹம்மது ஆதம்.
மக்கள் மருந்தகம்: அண்மையில் விடுப்பில் தாயகத்தில் இருந்த சமயம் மக்கள் மருந்தகம் சென்று அதன் நகர்வுகள் குறித்தும், நகர் மக்களின் ஆதரவுகள் பற்றியும் மருந்தகத்தின் பொறுப்பாளரிடம் கேட்டறிந்ததோடு, மக்கள் மருந்தகம் குறித்த செய்தி நம் நகர் மக்களிடம் மேலும் பரவலாக்கப்படவேண்டுமென்றும், தற்போது பெரும்பாலான மருந்துகள் அங்கு கிடைக்கிறதென்றும், தொடர் மருந்து உட்கொள்வோர் அம்மருந்தகத்தை பயன்படுத்தினால் சொற்ப செலவே ஆகுமென்றும், மக்கள் மருந்தகம் குறித்த விழிப்புணர்வை இன்னும் தொடர்ச்சியாக்கவேண்டுமென்றும் உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார் சகோ.அரபி M.I.முஹம்மது ஷுஐப்.
உதவிகள்:
பயனாளிகளிடமிருந்து வந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இருதயம், நுரையீரல், கிட்னி, சிறுநீரகம், கர்ப்பப்பை, வயிறு, கழுத்து, விபத்து போன்ற சிகிச்சைகளுக்காக 19 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மருத்துவம் எடுப்போர் விரைந்து குணம் பெறவும் பிரார்திக்கப்பட்டது.
கலந்துரையாடல்:
மன்றப்பணிகள் குறித்தும், நகர் பயனாளிகள் குறித்தும் அவர்களின் மருத்துவ தேவைகள் குறித்தும், உயர் கல்விக்கான வழிகாட்டுதல் குறித்தும், வரும் காலங்களில் காயல் மனமகிழ் சங்கம நிகழ்வுகள் சில மாற்றங்களோடு மெருகூட்டலாமென்றும் இதர முக்கிய விழிப்புணர்வு செய்திகள் பற்றியும் ஆரோக்கியமான வாதப்பபிரதிவாதங்களுடன்கூடிய கலந்துரையாடல் மன்ற செயற்குழு உறுப்பினர்களால் முன்னெடுப்பட்டு சிறந்த ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டது.
தீர்மானம்:
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 20.04.2018 வெள்ளியன்று மன்றத்தின் 111 வது செயற்குழு ஷரஃபிய்யா இம்பாலா உணவக கூட்டரங்கில் நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது அனுசரணையில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு, சகோ.S.H.அமீர் சுல்தான் நன்றி கூற, சகோ.P.S.J.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க - கஃப்பாராவுடன் இனிதே நிறைவுற்றது செயற்குழு கூட்டம் அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் மற்றும் படங்கள்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
23.03.2018.
|