காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில், ரசாக் மருத்துவமனையில் நடத்தப்பட்ட குருதிக் கொடை முகாமில், 28 பெண்கள் உட்பட 122 பேர் குருதிக்கொடையளித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) உடைய சமூக ஊடகப்பிரிவான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பில், அரசு ரத்த வங்கிகளுடன் இணைந்து - கடந்த ஆண்டு முதல் இரத்த தான முகாம்கள் - நகரில் நடத்தப்பட்டு வருகின்றன.
2017-2018 பருவத்தில் நடந்த 3 முகாம்கள் மூலம், சுமார் 250 பேர் இரத்த தானம் செய்தனர். 2018-2019 பருவத்திற்கு 500 பேர் என்ற இலக்கோடு, நடப்பது என்ன? குழுமத்தின் நான்காவது (இப்பருவத்தின் முதல்) இரத்த தான முகாம், நேற்று (ஏப்ரல் 4), காயல்பட்டினம் ரத்தினாபுரியில் உள்ள ரசாக் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
நடப்பது என்ன? குழுமம் ஒருங்கிணைத்திருந்த இந்த முகாமை - தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியின் இரத்த வங்கி பிரிவு நடத்தியது.
இம்முகாமின் துவக்க நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குனர் (JOINT DIRECTOR) டாக்டர் பரீதா ஸீரின் - சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.
MEGA அமைப்பின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஏ.முஹைதீன் தலைமை தாங்கினார்.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) மூத்த உறுப்பினர் ஹாஜி நஹ்வி அஹமது முஹைதீன், டாக்டர் நர்கிஸ் பானு, டாக்டர் ஜாபர் சாதிக், டாக்டர் இத்ரீஸ், டாக்டர் இர்ஷாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
MEGA அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.நூஹ் - இறைமறையில் இருந்து வசனங்கள் ஓதி - நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்.
MEGA அமைப்பின் உறுப்பினர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலி அறிமுக உரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் பரீதா ஸீரீன், டாக்டர் நர்கிஸ் பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
MEGA அமைப்பின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.புஹாரி உடைய நன்றியுரையுடன் துவக்க நிகழ்ச்சிகள் நிறைவுற்றது.
நிகழ்ச்சியினை MEGA அமைப்பின் உறுப்பினர் இ.அஹமத் சுலைமான் - நெறிப்படுத்தினார்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இம்முகாமில் - 129 பேர் பங்கேற்றனர். அவர்களில் 122 பேர் - இரத்த தானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 28 பேர் பெண்கள், 94 பேர் ஆண்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இரத்த தான முகாம் துளிகள்:
// அக்டோபர் 2017 இல் நடந்த முகாமில் 116 பேர் கலந்துக்கொண்டனர். அந்த எண்ணிக்கையை விட இம்முறை கலந்துக்கொண்ட கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகம்
// அக்டோபர் 2017 இல் நடந்த முகாமில் 27 பெண்கள் கலந்துக்கொண்டனர்; இந்த முகாமில் 28 பெண்கள் இரத்த தானம் செய்தனர்
// முகாமில் - ரசாக் மருத்துவமனை செவிலியர்கள் பலர் இரத்த தானம் செய்தனர்
// 110 முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்துள்ள காயலர் கானி எம்.ஏ.முஹம்மது மொஹைதீன் - மூன்றாவது முறையாக நடப்பது என்ன? குழுமத்தின் முகாமில் தானம் செய்தார்
// மருத்துவர்கள் - டாக்டர் ஹில்மி, டாக்டர் இர்ஷாத் ஆகியோர் முகாமில் இரத்த தானம் செய்தனர்
// திருச்செந்தூர் தாலுகா துணை வட்டாச்சியர் (DEPUTY TAHSILDAR) திரு ஆர்.கோபால் கிருஷ்ண சுந்தர் முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தார்
// தாவா சென்டர் மாணவர்கள் பலர் முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தனர்
// மாற்று திறனாளி திரு பி.சுடலை முத்து - முகாமில் கலந்துக்கொண்டு இரத்த தானம் செய்தார்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 5, 2018; 3:30 pm]
[#NEPR/2018040501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|