காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ஏப்ரல் 07 அன்று 19ஆம் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, கேரள மாநிலம் – குட்டிகாட்டூர் ஜாமிஆ ஆரிஃபிய்யா அன்வாரிய்யா அரபிக் கல்லூரியின் திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் மஸ்லஹீ, காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் ஜாஸிர் மஹ்ழரீ ஆகியோர் நிகழ்த்தினர்.
ரஜப் 20ஆம் நாள் (ஏப்ரல் 08) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|