தூத்துக்குடி மாவட்டத்தில் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன் குறித்து எந்தக் கவலையும் இன்றி, பல ஆலைகள் கட்டுப்பாடுகளின்றி இயங்கி, பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 02.04.2018. அன்று, அமெரிக்க நாட்டில், வாஷிங்டன் நகரிலுள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில், காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த அலியார் ஸாஹிப் என்பவரும் கலந்துகொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினார்.
போராட்டத்தின் நோக்கம் குறித்து நிறைவில் பேசிய அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை, DCW அமிலக் கழிவு ஆலை உள்ளிட்ட ஆலைகளை – சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொதுமக்கள் நலனைக் கருத்திற்கொண்டு நிரந்தரமாக மூட வேண்டுமென வலியுறுத்தினர்.
தகவல்:
அமீரகத்திலிருந்து...
A.H.முஹம்மத் ஸிராஜுத்தீன்
|