காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளியின் சார்பில், நடப்பு கல்வியாண்டு நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை தலைமை தாங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அப்துர்ரஹ்மான் வரவேற்றார்.
பள்ளி முதல்வர் சித்தி ரம்ஸான் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். குழந்தைகள் அடைந்த அறிவு திறன், உடல் இயக்க முன்னேற்றங்கள் பற்றி விளக்கிப் பேசிய அவர், அதற்காக ஒத்துழைப்பு வழங்கி உதவிய சிறப்பு ஆசிரியர்கள், தெரபிஸ்டுகள், பணியாளர்கள், பெற்றோர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
குறித்த நேரத்தில் தினமும் தவறாமல் வருகை தந்த பணியாளர், விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை தந்த பணியாளர், ஈடுபாட்டுடன் தொண்டு செய்த பணியாளர், உள மகிழ்வுடன் குழந்தைகளை பராமரித்த ஆயாக்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கும் நிர்வாகத்தின் சார்பில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காயல்பட்டினம் அப்பா பள்ளி தெரு முஹம்மத் ஹாரிஸ் குடும்பத்தினரின் குடும்ப விஷேச நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு புலவு விருந்து வழங்கினர்.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி மீண்டும் திறக்கப்படும் என்றும், நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.
|