காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா, இன்று 17.00 மணி முதல் 21.00 மணி வரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் - அவ்வமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடைய தந்தை அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன், இன்று 09.00 மணியளவில் காலமானதையடுத்து, இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, அதன் விழாக் குழு தலைவர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் தெரிவித்துள்ளார். |