காயல்பட்டினத்தில் தரமான தார் சாலைகள், அஞ்சல் நிலையக் கட்டிடம், தெரு விளக்குகள், தெருவோர குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நகராட்சியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆணையரிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக வி.கே.புரம் நகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த திரு பிரேம் ஆனந்த் சில தினங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
காயல்பட்டினம் நகராட்சியில் நிலுவையில் உள்ள முக்கிய பணிகளை விரைவில் நிறைவேற்ற கோரி - புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையரை இன்று சந்தித்த நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
குறிப்பாக -
// பேவர் பிளாக் சாலைகளுக்கு பதிலாக தரமான தார் சாலைகள் அமைத்தல்
// சர்வே எண் 83/84 இடங்களில் (பேருந்து நிலையம் உட்பட பல்வேறு அரசு சார்ந்த கட்டிடங்கள் உள்ள வளாகம்) உள்ள காலியிடம் ஒன்றில் தபால் நிலையத்திற்கான கட்டிடம் அமைத்தல்
// பைபாஸ் சாலையில் மின் விளக்குகள் அமைத்தல்
// தெருவோரங்களில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளில் - கோடை காலத்தை கருத்தில் கொண்டு - குடிநீர் நிரப்புதல்
// கடற்கரையில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பறையை விரைவில் திறந்திடல்
- ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
கோரிக்கைகளை பொறுமையாக கேட்ட ஆணையர், அவைகள் குறித்து உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது - காயல்பட்டினம் நகராட்சியின் பொறியாளர் (பொறுப்பு) திரு சுரேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு பொன்வேல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 13, 2018; 10:45 pm]
[#NEPR/2018041301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|