காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 30ஆம் ஆண்டு முப்பெரும் விழா, 17.04.2018. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 21.00 மணி வரை நடைபெறுமென விழாக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் விழாக்குழு தலைவர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்!
எமது அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அவர்களது தந்தை அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்கள், கடந்த 13.04.2018. வெள்ளிக்கிழமையன்று 09.00 மணியளவில் காலமானதையடுத்து, அன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட அதே நிகழ்ச்சி நிரலின் படி, இன்ஷாஅல்லாஹ் – வரும் 17.04.2018. செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணி முதல் 21.00 மணி வரை முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
நமதூரைச் சேர்ந்த – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள வணிகர்களுக்கு இவ்விழாவின்போது நலத்திட்ட உதவிகளும் இதன்போது வழங்கப்படவுள்ளன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், அனைவரும் திரளாகக் கலந்து சிறப்பிக்க வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விழா நிகழ்ச்சி நிரல் கீழே தரப்பட்டுள்ளது. அதில், நிகழ்வு நாளை மட்டும் “17.04.2018. செவ்வாய்க்கிழமை” என திருத்திப் படிக்க வேண்டுகிறோம்...
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘FM ஸ்டோர்’ மஹ்மூத் லெப்பை
(செயலாளர்: QYSS) |