கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் சட்டமன்றக் கட்சித் தலைவரும், அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உடைய தந்தை அல்ஹாஜ் கே.எல்.டீ.அஹ்மத் முஹ்யித்தீன், இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. அன்னார்,
மர்ஹூம் அல்ஹாஜ் குளம் லெப்பைத் தம்பி ஆலிம் அவர்களின் மகனும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.கே.தைக்கா உமர் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் குளம் செய்யித் இப்றாஹீம், மர்ஹூம் குளம் சிப்கத்துல்லஹ், குளம் முஹம்மத் முஹ்யித்தீன், குளம் மூஸா நெய்னா ஆகியோரின் சகோதரரும்,
குளம் கே.ஏ.எம்.தைக்கா உமர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயளாலரும் - கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான குளம் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், ஹாஃபிழ் குளம் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் ஆகியோரின் தந்தையும்,
மர்ஹூம் டீ.ஓ.மஹ்மூத், ஹாஜி டீ.ஓ.அய்யூப் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சிறிய குத்பா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
S.A.முஹ்யித்தீன், A.R.ஷேக் முஹம்மத் & ‘பெத்தப்பா’ சுல்தான்
படம்:
S.A.இப்றாஹீம் மக்கீ
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 13:58 / 13.04.2018.] |