இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் வைர விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கணினி பயன்பாட்டுப் பொருட்கள், நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக திருச்செந்தூர் கிளை மேலாளர் வெங்கடேசன், நிர்வாக அதிகாரி ராஜாசிங், உயர் நிலை அலுவலர் கே.எம்.இஸ்மாஈல் ஆகியோர் துளிருக்கு நேரில் சென்று அவற்றை வழங்கினர்.
முன்னதாக, துளிர் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதன் முதல்வர் இசட்.சித்தி ரம்ஸான் துளிர் பள்ளியின் செயல்பாடுகள், தொண்டுப் பணிகள் குறித்து விளக்கிப் பேசினார்.
பள்ளிக் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, துளிர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பீ.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.
|