ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் 06ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள காயலர்கள் அனைவருக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் அழைப்பறிக்கை:-
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 06 வெள்ளியன்று ஸஃபா பார்க்கில் (Safa Park) பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கு துபை காயல் நல மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதற்காக காயல் நல மன்ற சிறப்பு செயற்குழுக் கூட்டங்கள் கடந்த 16.03.2018, 23.03.2018 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.
துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கூட்டங்களில் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன.
பொதுக்குழுக் கூட்டம் நடத்துவதற்கான இடம், உணவு, வாகனங்கள், நடத்தப்பட வேண்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் கலந்தாலோசிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பொதுக்குழுக் கூட்டம் நடப்பது குறித்த அறிவிப்பை நமதூர் இணையதளங்கள் மூலமும், வாட்ஸ்அப் மூலமும் அனைத்து அமீரக காயலர்களுக்கும் தெரியப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், அமீரகவாழ் காயலர்களுக்கும் துபை காயல் நல மன்றத் தலைவர் ஜே.எஸ்.ஏ. புகாரீ காக்கா அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அன்புள்ளம் கொண்ட துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அமீரகவாழ் காயலர்களுக்கும்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் இம்மாதம் ஏப்ரல் 06ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் துபை ஸஃபா பூங்காவில் (Safa Park, Gate No. 2) காலை 10 மணி முதல் நடைபெறும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஸஃபா பார்க்கில் கூட்டம் நடத்துவதற்கான முறையான அனுமதி கிடைப்பதற்கு காலதாமதம் ஆனதால் இவ்வறிவிப்பு வெளியிடுவதற்கு தாமதமாகிவிட்டது.
இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் ஓன்றுகூடல், சாப்பாடு, சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரியோர்களுக்கான வினாடி-வினா போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கின்றன.
வழமை போல் பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்கள் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் புடைசூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பித்துத் தருமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அத்தோடு நமது நல மன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும், விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் நடத்தப்படவும் வழமை போல் முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை ஊக்குவிக்கும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10.30 மணிக்குள் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்கு முன் வருவோருக்கும், அதன் பின் ஜும்ஆவுக்குப் பின் வருவோருக்கும் என்று மூன்று குலுக்கல்கள் நடைபெற்று தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படவிருக்கின்றன.
அதே போன்று தன்னார்வத் தொண்டர்களுக்கும், செயற்குழு உறுப்பினர்களுக்கும் தனித் தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல முதீனா லுலு சென்டருக்குப் பின்புறம் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரியாக 8.30 மணிக்கு முதல் வாகனமும், 9.30 மணிக்கு இரண்டாவது வாகனமும் அங்கிருந்து புறப்படும். இது சம்பந்தமாக சகோதரர் ஹுஸைன் ஃபாரூக் அவர்களை அலைபேசி எண் 052-7968499 க்கு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.S.அப்துல் ஹமீத்
|