இலங்கை பட்டுப்பிட்டிய நகரிலுள்ள மின்ஹாஜிய்யா அரபிக் கல்லூரியில் 18 ஆண்டுகாலம் முதல்வராகவும், சென்னை மதீனத்துல் இல்ம் அரபிக் கல்லூரி, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணியாற்றியவரும், துவரங்குறிச்சி நகரில் சுமார் 35 ஆண்டுகாலம் ரமழான் சிறப்புத் தொழுகையை (தராவீஹ்) தொடர்ந்து நடத்தியவருமான – சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.செய்யித் ஹாமித் ஸிராஜீ, இன்று 02:10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,
மர்ஹூம் அல்லாமா நஹ்வீ முஹம்மதிஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் அல்லாமா நஹ்வீ இஸ்ஹாக் லெப்பை ஆலிம், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.கே.ஷெய்க் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனும்,
குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் உடைய மகனும்,
குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் முன்னாள் செயலர் மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகனாரும்,
மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோரின் மருமகனும்,
நஹ்வீ எஸ்.எம்.பி.அபூபக்கர், ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.எம்.பி.ஜெய்லானீ ஆகியோரின் சகோதரரும்,
நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை உடைய சகோதரியின் கணவரும்,
ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.தவ்ஹீத், ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஆகியோரின் மாமனாரும்,
ஹாஜ் எம்.என்.எல்.இஸ்ஹாக் லெப்பை உடைய சகளையும்,
ஹாஃபிழ் ஐ.எல்.நூஹ் லெப்பை, ஐ.எல்.செய்யித் இஸ்மாஈல், ஐ.எல்.முஹ்ஸின் காமில் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 21:00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |