வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் சார்பில் – ஹாங்காங்கில் நடத்தப்பட்ட காயலர் சங்கம நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கண்ணியப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
We are United by Sports என்ற முழக்கத்துடன், எல்லாம் வல்ல இறைவனின் துணையோடு 2001ஆம் ஆண்டு முதல் ஹாங்காங் மற்றும் காயல்பட்டணத்தில் வீரர்களிடையே ஒற்றுமையையும், விளையாட்டு திறமையும் மேம்படுத்தும் விதமாக காயல்பட்டினம் மற்றும் காங்காங்கில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கேரம், Bowling, Snooker, இறகுப்பந்து மற்றும் தடகளப் போட்டிகளை காயல்பட்டினத்தின் விளையாட்டு மைதானங்களின் ஒத்துழைப்போடு சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எமது V-United Sports சார்பில் நடத்தி வருகின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹாங்காங் – சிம் ஷா சேய்-ல் அமைந்துள்ள துர்க்கி உணவகத்தில் மதியம் விருந்துடன் காயலர்களின் சங்கம நிகழ்விற்கு எமது V-United குழுமத்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திகழ்வில் சிறுவர்கள், பெரியவர்கள் என 84 நபர்கள் பங்கேற்றனர். இந்த விருந்துபசரிப்பிற்கு முன்னதாக, சென்ற வருடத்தின் சிறந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன் விபரம் வருமாறு…
இந்நிகழ்வின் துவக்கமாக இறைமறை வசனத்தை ஹாஃபிழ் அப்துல் கஃப்ஃபார் ஓதினார்கள்.
அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் (Life Time Achievement) விருதினை எமது V-United கால்பந்து அணியின் பயிற்சியாளரும், வீரருமான S.H. ஹபீப் ரஹ்மான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
2017ஆம் ஆண்டின் இளம் வீரருக்கான விருதினை மூன்று நபர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக, பேங்காங்கில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரருக்கான பரிசினைபெற்ற அப்துல் கஃப்ஃபாருக்கு (Rising Star) வழங்கப்பட்டது.
இரண்டாவதாக, Rising Star விருதினை இன்ஸாஃப் இத்ரீஸ் பெற்றார்.
மூன்றாவதாக, Rising Star Junior விருதினை அஃப்ரஸ்-க்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நம்பிக்கைக்குறிய வீரர் (promising player) விருது இரண்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
முதலாவதாக, promising player விருதினை U. சம்சுத்தீன்-க்கு வழங்கப்பட்டது.
இரண்டாவதாக promising player விருதினை ஃபுஜைல்-க்கு வழங்கப்பட்டது.
விருது வழங்கும் நிகழ்வின் இறுதியாக, எமது V-United குழுமத்தின் அனைத்து பணிகளிலும் முழுஈடுபாட்டோடு தன்னை அர்பணித்து, எங்களது குழுமத்தின் முதுகெலும்பாக திரைமறைவில் இருந்து செயல்படும் சகோ. A. அஹமது தஸ்லீம் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு குழுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளுக்கான அணுசரனையை V-United Forex, சகோ. United Asia Exchange அர்ஷத், சகோ. Faams M,F. சாலிஹ் மற்றும் சகோ. V2000 M.A. செய்யது அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து சகோ. S. இஸ்மாயில் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். நிகழ்ச்சிகளை பொறியாளர் சகோ. செய்யது அஹமது அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இறுதியாக ஹாஃபிழ் சுல்தான் அவர்களின் துஆ-விற்கு பின்னர், மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |