தூத்துக்குடியில் சுற்றுலாப் பயணியரைக் கவர்வதற்காக படகு சவாரி அமைக்கப்படவுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாநகர மக்களின் மனதைக் கவரும் வகையிலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும், மாநகரத்திற்குட்பட்ட ரோச் பூங்கா அருகில் படகு சவாரி அமைக்க தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது. மேற்படி பணிக்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.77.00 இலட்சம் மதிப்பீட்டில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியாpன் பாpந்துரையின் போpல், வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தின் சி.எஸ்.ஆர். நிதி திட்டத்தின் கீழ் செயல்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்பணிக்காக கடந்த 13.03.2018 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதுடன், மேற்படி பணியானது விரைவில் துவங்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதனால், கடல் சார்ந்துள்ள இயற்கையினை பொதுமக்கள் கண்டு ரசிக்கவும், வெகு தொலைவுக்கு சென்று அதிக பொருட்செலவில் படகு சவாரி செய்வதற்கு மாறாக அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் எளிதில் வருகை தந்து குதூகலமாக படகு சவாரி செய்வதற்கான வசதி செய்யப்படவுள்ளது.
மேலும், குழந்தைகளின் மனதை கவரும் வகையில், விளையாட்டு சாதனங்கள் மற்றும் சிற்றுண்டி மையங்களை உள்ளடக்கிய சாலை வசதிகளுடன் கூடிய சிறப்பம்சங்களுடன் படகு சவாரி நிலையம் அமையப்பெறுவதால், தூத்துக்குடி வாழ் பொதுமக்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி மாநகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் மகிழ்விக்கும் இடமாக படகு சவாரி விளங்கும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
|