காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் தலைவர் ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ உடைய தாய்மாமா - குறுக்கத் தெருவைச் சேர்ந்த வாவு முஹ்யித்தீன் தம்பி, இன்று 12:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. அன்னார்,
மர்ஹூம் வாவு முஹம்மத் அலீ அவர்களின் மகனும்,
மர்ஹூம் சாளை ஏ.எஸ்.ஸுலைமான் அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் வாவு சுலைமான் லெப்பை, தைக்க தம்பி, மர்ஹூம் வாவு அப்துஸ் ஸலாம் ஆகியோரின் சகோதரரும்,
காயல்பட்டினம் முன்னாள் தேர்வு நிலை பேரூராட்சியின் தலைவர் மர்ஹூம் வி.எம்.எஸ்.லெப்பை, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் நிர்வாகி முனைவர் ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் ஆகியோரின் மைத்துனரும்,
சாளை ஷெய்க் ஹுமாயூன் உடைய மாமனாரும்,
மர்ஹூம் சாளை ஷெய்க் ஷீத், சாளை அபூ ஸுஃப்யான் ஆகியோரது தாயாரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 18:00 மணிக்கு காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம். |