பழைய சாலையைத் தோண்டிய பின்பே புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, பொதுமக்கள் நலன் கருதி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தமிழகம் முழுவதும் பழுதடைந்த சாலைகளை புனரமைக்கும் போது, பழைய சாலைகளை தோண்டாமல், அதன் மேலேயே புதிய சாலைகள் போடுவது வழமையாக உள்ளது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்து, வீடுகளுக்குள் தண்ணீர் வரும் நிலை பல இடங்களில் ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக - சிட்லபாக்கம் டவுன் பஞ்சாயத்து சார்ந்த பால சந்தர் என்பவர் பொது நல வழக்கு ஒன்றினை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். சிட்லபாக்கம் டவுன் பஞ்சாயத்து புதிய சாலைகளை போட டெண்டர் விட்டுள்ளதாகவும், அதில் பழைய சாலையை தோண்டிப்போட வழிகாணப்படவில்லை என்றும் அவர், தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
புதிய சாலை போட இடைக்கால தடை விதித்திருந்த உயர்நீதிமன்றம், மார்ச் 9 அன்று - அவ்வழக்கில் இறுதி ஆணை பிறப்பித்ததது. அதன் முழு விபரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த வழக்கு நடக்கும்போது டவுன் பஞ்சாயத்து சார்பாக பழைய சாலை தோண்டப்படும் என வழங்கப்பட்ட உத்திரவாதத்தை கருத்தில்கொண்டு, தலைமை நீதிபதி திருமதி இந்திரா பனர்ஜீ மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு - புதிய சாலைகள் போடும் ஒப்பந்ததாரர்களுக்கு பழைய சாலையை கண்டிப்பாக தோண்டி போடவேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும், அவ்வாறு தோண்டிப் போடப்படுகிறதா என அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு விபரம்:
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 22, 2018; 9:30 pm]
[#NEPR/2018032201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|