சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்றம் சார்பில், நோன்புப் பெருநாளை முன்னிட்டு, வரும் ரமழான் மாதத்தில் – ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கவும், பெருநாளன்று இறைச்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அவ்வமைப்பின் செய்தியறிக்கை:-
சிறப்பான ரஜப் மாதத்தை அடையும் பாக்கியத்தை தந்த வல்ல ரஹ்மான், இன்ஷா அல்லாஹ் புனித மிகு ரமலான் மாதத்தை அடைந்து நற்கருமங்கள் செய்யும் நற்பேற்றினையும் நம் யாவர்க்கும் தந்து அருள்பாலிப்பானாக ஆமீன்.
ரியாத் காயல் நல மன்றம் சார்பில், கடந்த ஆறு வருடங்களாக புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏராளமான ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிடும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டும் (2018) ரமழான் நோன்பை முன்னிட்டு ரியாத் காயல் நல மன்றத்தின் சார்பில் ஏழைக் குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்ய கடந்த செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பெருநாளை முன்னிட்டு இவர்கள் அனைவருக்கும் நாட்டுக்கோழி ஒன்று வழங்கிடவும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள எம் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சகோதரர் இப்ராஹீம் பைசல் மற்றும் சகோதரர் இர்ஷார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நற்காரியத்திற்கு வழமைப்போல் எம்மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு குடும்பத்திக்கு நிர்ணயித்த முழுத்தொகையை தர சம்மதம் தெரிவித்து உள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பை தனியாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந்து கூட்டாகவோ வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிர்ணயம் செய்யப்பட ஒரு குடும்பத்திற்கான தொகை தனி நபர் பங்களிப்பாக வழங்கும் பட்சத்தில், அவர்கள் விரும்பும் பயனாளிக்கு உணவு பொருட்கள் வழங்கப்படும். மேலும் தாங்கள் வழங்கும் பயனாளி ஏற்கனவே மற்ற மன்றங்களின் பட்டியலில் இடம்பெறும் பட்சத்தில் மீண்டும் வேறொரு பயனாளியின் விபரம் உங்களிடம் வினவப்படும்.
2012ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ்,
2012ஆம் ஆண்டில் 52 குடும்பங்களுக்கும்,
2013ஆம் ஆண்டில் 72 குடும்பங்களுக்கும்,
2014ஆம் ஆண்டில் 81 குடும்பங்களுக்கும்,
2015ஆம் ஆண்டில் 125 குடும்பங்களுக்கும்,
2016ஆம் ஆண்டில் 178 குடும்பங்களுக்கும்,
2017ஆம் ஆண்டில் 228 குடும்பங்களுக்கும்
உணவுப் பொதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுகுழு உறுப்பினர்கள் தங்களின் பங்களிப்பை இன்ஷா அல்லாஹ் வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதிக்குள் இத்திட்டத்தின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் இப்ராஹிம் பைசல் (0503610043, Email: faismal.ar@gmail.com) மற்றும் சகோதரர் இர்ஷாத் (0500950102; Whatsapp +918754934313, Email: seyed_be@yahoo.com) அவர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
புனித மிகு ரமலான் மாதத்தில் நாம் செய்யும் இது போன்ற நல்ல காரியங்களை வல்ல ரஹ்மான் ஏற்று ஈருலகிலும் வெற்றியை தருவானாக அமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
ஊடகக் குழு, RKWA.
|