தம்மாம் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சி, 30.03.2018 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள – சஊதி அரபிய்யாவின் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் காயலர்களுக்கும் & மன்ற ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்து, மன்றத்தின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 30.03.2018 (வெள்ளிக்கிழமை) காலை 8:00 மணிக்கு தம்மாம் 91 புறநகர் (ஃபைஸலியா / Faisaliyah) பகுதியிலுள்ள அல்-கல்’ஆ இஸ்திராஹாவில் (Isthiraahaa Qal’ah / Castle Recreation Center) வைத்து, காயல் நற்பணி மன்றம் – தம்மாம் அமைப்பின் 82-வது பொதுக்குழு அமர்வு & 3-வது குடும்ப சங்கம நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த சிறப்பான நிகழ்வில், நமது மன்றத்தின் உறுப்பினர்கள் & ஆதரவாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: வருகைக்கான முன்பதிவினை, தயைக் கூர்ந்து மன்ற நிர்வாகிகளுக்கு துரிதமாக தெரிவிக்கவும். நிகழ்ச்சிக்கான ஆயத்த பணிகளை செம்மையாக செய்திட, அது பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|