காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் நாளன்று குருதிக்கொடை முகாம் – இரத்தினபுரி ரசாக் மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் குருதிக்கொடையளிக்க விரும்புவோர் ஆன்லைனிலேயே பெயர் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இணையவழி முன்பதிவு: ஏப்ரல் 4 (புதனன்று) - காயல்பட்டினத்தில் இரத்த தான முகாம்!
தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி இரத்த வங்கி ஏற்பாட்டில், நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தில் இரத்த தான முகாம்!
நாள்: இறைவன் நாடினால் ஏப்ரல் 4, 2018 (புதன்கிழமை)
நேரம்: காலை 9:30 முதல் மாலை 3:00 வரை
இடம்: ரசாக் மருத்துவமனை வளாகம், எல்.எப்.சாலை, இரத்தினாபுரி, காயல்பட்டினம்
இந்த முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ளோர், கீழுள்ள இணைப்பு மூலம் முன்பதிவு செய்யலாம்:
https://goo.gl/forms/vbdtdMCoOrO4DAlN2
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: மார்ச் 21, 2018; 10:30 pm]
[#NEPR/2018032102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |