காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 91ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 18.03.2018. ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
மார்ச் 20 அன்று முதல் நாளில், ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் மேலாளருமான மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ நிகழ்த்தினார்.
எண்ணம் (நிய்யத்), நபிகளாருக்கு இறைச்செய்தி (வஹீ) இறங்கிய விதம், வஹீயின் வகைகள் உள்ளிட்டவை குறித்து அவரது உரையில் தகவல்கள் இடம்பெற்றன.
ரஜப் 02ஆம் நாள் (மார்ச் 21) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
|