நெல்லை மாவட்டம் தென்காசியில் ரத யாத்திரை நுழைய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதைக் கண்டித்தும், மறியலில் ஈடுபட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் - காவி பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பில் திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல், 20.03.2018. செவ்வாய்க்கிழமையன்று 14.30 மணிக்கு நடைபெற்றது.
இதில் SDPI, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயகக் கட்சி, ஆம் ஆத்மி, நாம் தமிழர் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கட்சிகள் கலந்துகொண்டு, ரத யாத்திரைக்கெதிராகவும், தலைவர்களை விடுதலை செய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட SDPI மாவட்ட தலைவர் ஷேக் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.முஹம்மத் நஜீப், ஆம் ஆத்மி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வி.குணசீலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.ஜோஸஃப் நொலாஸ்கோ, அதன் மாவட்ட செயலாளர் மோத்தி முஸ்ஸம்மில், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.அருண்பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ் பரிதி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து, பின்னர் விடுதலை செய்தனர்.
தகவல்:
காவி பயங்கரவாதிகள் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில்
H.ஷம்சுத்தீன்
SDPI கட்சி - தூத்துக்குடி மாவட்டம்.
|