செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! ஏப். 07 அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[06 April 2018] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46116
என் பாசத்திற்கும்,பண்பிற்கும்,மரியாதைக்குரியவரான கியாது சேட் அவர்கள் வபாத்தான செய்தியறிந்து சொல்லணா வேதனையால் வெதும்பினேன்!
அந்த புண்ணியவானைப்பற்றிய ஒருசில உண்மைவரிகள்: நான் இன்றுவரை அரபுநாட்டில் இருந்துகொண்டு பல லட்சங்களை சம்பாத்தித்து என் குடும்பத்தார்கள் அனைவர்களையும் வாழவைத்து நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால்,அதற்கு முதல் முழு காரணகர்த்தாவாக எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நிமயமிக்கப்பட்ட மகிமைமிகு மனிதரில் ஒருவர் கியாதுசேட் அவர்கள்தான்என்றால் அது மிகையல்ல.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னாள் அரபுநாட்டிற்க்கு செல்லவேண்டும் என்று பம்பாய்க்கு வரும் நமதூர் பிள்ளைகளை வரவேற்று தங்கள் பல்லாக்கு நிறுவன இல்லத்தில் இலவசமாக தங்க வைத்து, அவர்களை சரியான அரபுநாட்டு ஏஜெண்டு மூலமாக அரபகத்திற்கு அனுப்பி வைக்கின்ற ஒரு புண்ணியமான சேவையை எந்த சத்தமும் இன்றி, எந்த விளம்பரமும் இன்றி, எந்த சுயநலமும் இன்றி செய்து வந்தது பம்பாய் பல்லாக்கு நிறுவனம். அதில் முதன்மையாகவும்.முக்கியமாக செயல்பட்டவர்கள் மர்ஹூம் சேகு ஹாஜியும்,கியாது சேட்டு அவர்களும்.
ஒருசிலருக்கு ஏஜெண்டு பணத்தொகையைக்கூட கடனாக கொடுத்துதவி செய்திருக்கிறார்கள்.அப்படி உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன்!.
நமதூரில் ஏழை,நடுத்தரகுடும்பங்களை சேர்ந்தவர்கள் அரபுநாடு சென்றால் அவர்கள் குடும்பம் நன்றாக வாழட்டுமே என்ற ஒரு மனிதநேயமிகு மாண்புதவி குறிக்கோளைத்தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை!
கியாதுசேட் என்னிடம் பணம் தரும்பொழுது கூறிய வார்த்தைகள்,சுல்தான் உனக்குத்தரும் இந்த தொகையை நீ அனுப்பவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது, உன்னைப்பற்றி கேவிப்பட்டேன்,உன்னுடைய தவ்ஹீது நடவடிக்கையையும் கவனித்து வந்திருக்கிறேன், ஆகவே,உன் உடன்பிறந்தாரின் சிபாரிசுகளைவிட உன்னை நான்நம்புகிறேன்,நீ சரியாக திருப்பி அனுப்பினால் அந்த பணம் உன்னைபோன்று வேறொருவருக்கு உபயோகமாகும் என்று கூறினார்கள் என்றால் அவர்களின் தொடர்ச்சியான உதவும் உள்ளம்,அந்த உணர்வு எப்படி ஊற்றுக்கண் போல் ஊறுகிறது!
அன்று 30 வருடங்களுக்கு முன்னாள் ரியாத்துக்கு ஒரு கார் கம்பெனிக்கு அவர்களால் அனுப்பப்பட்ட நான்,அக்கம்பெனியில் நமதூர் பிள்ளைகளை சுமார்50 திலிருந்து60 பிள்ளைகள் வரை சேர்க்கக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.சுமார்10 விசாக்களை நமதூருக்கு அனுப்பி அவர்களையும் வரவழைக்கும் வாய்ப்புக்குரிய பாக்கியத்தையும் பெற்றேன்.
அந்த அனைத்து குடும்பங்களின் துவாவும்,எனக்கும்,என்னை அனுப்பிவைத்த கியாதுசேட் அவர்களுக்கும் அவர்களின் பல்லாக் நிறுவனத்திற்கும் நிச்சியம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை என்றைக்கும் எனக்குண்டு!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய எல்லாப்பிழை களையும் பொறுத்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவித்துயரில் துவளும் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழந்த அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.அஸ்ஸலாமுஅழைக்கும்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross