செய்தி: மக்கள் பணியில் இருபது வருடங்களைக் கடந்த தம்மாம் கா.ந.மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் விளக்கம்!! பல்சுவைப் போட்டிகளுடன் நடந்தேறிய குடும்ப சங்கம நிகழ்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாற்றம் ஒன்றுதான் மாறாதது posted bymackie noohuthambi (kayalpatnam )[10 April 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46125
சுபுஹானல்லாஹ். இந்த நிகழ்ச்சி களைகட்டுவதை பார்த்து பரவசமடைகிறேன்.சவூதி அரேபியாவில் இவ்வளவு சுதந்திரமா!
1983 -85 காலகட்டத்தில் இந்த மாபெரும் மன்றத்தின் செயலாளராக பணி புரியும் வாய்ப்பை எனக்கு தந்தார்கள். பழைய கோப்புக்கள் உங்களிடமிருந்தால் அதை பார்க்கலாம்.
சின்ன எஸ்க்கே பொருளாளர் எ.ஆர் தாஹா கொள்கை பரப்பு செயலாளர். KMT அமைவதற்கு இங்கு நாங்கள் வசூல் வேட்டையில் இறங்கினோம். அப்போதுதான் பல இடங்களில் பல கஷ்டங்களை அனுபவித்து வரும் நமதூர் மக்களை பார்க்க நேரிட்டது உள்ளம் நெகிழ்ந்தது..
ஒரு சர்வாதிகார ஆட்சியில் இருப்பதுபோல் உணர்ந்தோம் வெளியே இப்படி எல்லாம் சுதந்திரமாக ஆடிப் பாடி விளையாடி இன்பமாக இருக்க முடியாது.
தாலிக்கு தங்கம் என்ற திட்டம் முதலில் இங்குதான் அரங்கேறியது. 20 பெண்களுக்கு கழுத்துக்கு ஒரு அழகிய அணிகலன். அதை ஊரில் சத்தமில்லாமல் அவர்கள் வீட்டில் கொடுக்க வேண்டும் என்று நானும் அதை வெளிப்படையாக கொடுக்க வேண்டும் என்று வேறு சிலரும் நினைத்ததில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நான் பதவி விலகினேன் அதன் பிறகு கால ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வேறு வேறு இடங்களுக்கு மாறி சென்றோம். என்றாலும் KMT யில் .இன்றும் பொது வார்டில் தம்மாம் காயல்நல மன்றம் என்ற கல்வெட்டு நம் சாதனைகளை சொல்லிக் கொண்டிருக்கின்றது.
நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போது இன்பம்
வாடும் ஏழை மக்கள் முகத்தை பார்க்கும் போதும் இன்பம்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross