Re:...நமதூர் மக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[19 May 2018] IP: 27.*.*.* India | Comment Reference Number: 46179
யார் எந்த கட்சி தொடங்கினாலும் உடனே நமதூர் மக்கள் யாரவது ஒருவர் அந்த கட்சியின் செயலாளராகவோ முக்கிய பதவி வகிப்பவராகவோ இருந்து வருவார் என்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். யார் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல அந்த கட்சி மூலம் நமது ஊருக்கும் நமதூர் மக்களுக்கும் நமது சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய்வாரா என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.
எனது இனிய நண்பர் SK அவர்கள் மறைந்தபோது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பெரிய பல்லாக் அவர்கள் ஒரு செய்தியை பதிவு செய்தார்கள்.
SK அவர்களுக்கும் பல்லாக் அவர்களுக்கும் இருந்த நெருக்கத்தில் ஒரு முறை பல்லாக அவர்கள் SK அவர்களை கேட்டார்..அடே நீ இப்படி எல்லா கட்சியிலும் இருக்கிறாயே, பிஜேபி கட்சியிலும் சேருவாயோ...என்று கேட்டாராம் அதற்கு SK அவர்கள் அமைதியாக பதில் சொன்னார்
ஆம் பிஜேபியிலும் சேர்வேன் அந்த கட்சி நமதூருக்கும் நமது மக்களுக்கும் நமது சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மைகள் செய்யும் என்றால் அந்த கட்சியிலும் சேர்வேன்..எவ்வளவு தூர நோக்குப் பார்வை. அல்லாஹ் அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக.
கமல் ஹசன் கட்சி ஆரம்பித்திருப்பதிலோ நமதூரில் அவர் உரையாற்றியதிலோ அவர் கட்சியில் நம்மவர்கள் சேர்வதிலோ நமக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் SK அவர்களின் தூர பார்வை இருக்க வேண்டும்.
கமல ஹாஸன் அவர்கள் விசுவரூபம் எடுத்தபோது அந்த படம் முஸ்லிம்கள் மனதை புண்படுத்துவதாக அமைந்தது என்பதால் அது வெளியிடும் தேதி பின்போடப் பட்டது என்பதெல்லாம் நாம் அறிந்த கதை. இப்படியெல்லாம் எனக்கு இடையூறு வந்தால் இந்த நாட்டை விட்டே நான் வெளியேறவேண்டி வரும் என்று திருவாய் மலர்ந்தருளிய கமல் ஹசன் இப்போது தமிழ்நாட்டு மக்களை முஸ்லிம்களை சந்தித்து வருகிறார்.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று அவரை வாழ்த்தி வரவேற்போம். அடுத்து ரஜினி காந்தும் களம் இறங்க இருக்கிறார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross