செய்தி: ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: 3 நாட்கள் கடையடைப்பு! தூ-டி., நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...தலை எழுத்தை மாற்ற முடியாது posted bymackie noohuthambi (kayalpatnam )[28 May 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46181
நமது நாட்டில் எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் அதன் உண்மை தாக்கத்தை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை. அவர்களுடன் ஆரம்ப கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதும் இல்லை அதன் உண்மை நிலையை அறிந்து நடவடிக்கை எடுப்பதுமில்லை பல உயிர்கள் பலியான பின்பே அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள்.
அரசியல் கட்சிகளும் இந்த இடத்தில தங்கள் கட்சிகளை அதன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்ள நல்ல குளிர் காய்வதற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களுக்காக என்று அவர்கள் தங்கள் நியாயங்களை எடுத்து வைப்பதுமில்லை.
உதாரணமாக எல்லா கட்சி தலைவர்களும் தூத்துக்குடி மருத்துவ மனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்களே, அவர்களுக்கு தங்களின் கட்சி சார்பாக குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயை நிதியாக அளிக்கலாம். உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று அவர்களின் குடும்பத்தாருக்கு ஒரு சில லட்சங்களை கொடுத்து ஆறுதல் சொல்லலாம். எல்லா கட்சிகளுக்கும் கோடிக் கணக்கில் பணம் இருக்கிறது. பல நிறுவனங்களிலிருந்தும் அவர்களுக்கு பணம் வருகிறது. தேர்தல் கமிஷன் அதை எல்லாம் கண்டு கொள்ளாது என்ற நியதியும் உள்ளது. ஆறுதல் வார்த்தைகள் சொல்வதற்கு பணம் தேவை இல்லை அதனால் அதை செய்கிறார்கள். மக்களும் ஏமாறுகிறார்கள். அடுத்த தேர்தலை கண் வைத்தே காய்களை நகர்த்துகிறார்கள்
இதுதான் நம் நாட்டின் தலை எழுத்து. இதை மாற்ற யாரால் முடியும்..... நானும் இறந்தவர்களுக்கும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வேறென்ன செய்வது. பணம் கொடுத்தால் மட்டும் சென்ற உயிரை மீட்டு எடுக்க முடியுமா என்று டயலாக் பேசி விட்டு போக வேண்டியதுதான்..
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கை கோர்த்து நிற்கும் அரசுகள் கை நீட்டி பணம் வாங்கும் அரசுகள் மக்களுக்காக எதை செய்யப் போகிறார்கள் போங்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross