Re:...சுபுஹான் பீர் முஹம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[22 June 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46193
சுபுஹான் பீர் முஹம்மது அவர்களின் நிழல் படங்களை பார்த்து சொக்கி நிற்கின்றவர்கள் அவர்களுடைய ஆங்கில நஹ்வுகளையும் மறந்து ரசிக்கிறோம். may this special day bring peace என்று வரவேண்டும். singular plural ஆங்கிலத்தில் சில சமயம் அர்த்தத்தை புரட்டிப் போட்டு விடும்.
திருவிளையாடல் திரைப் படத்தில் ஒரு வசனம் வருகிறது. ஒரு நல்ல கவிதைக்கு மன்னர் பரிசளிப்பதை பார்த்து சந்தோசப் படுபவனும் நானே...ஒரு தவறான கவிதைக்கு மன்னர் பரிசளிக்கிறார் என்றால் அதை கண்டு வேதனைப் படுபவுனும் நானே என்று நக்கீரர் கூறுவார்...ஓஹோ இங்கு எல்லாமே நீர்தானா என்று கவிதையை கொண்டுவந்தவர் சொல்வார்.
கவிதையை உண்மையில் யாத்தவர் மன்னனின் சபைக்கு வந்தபோது நீரே முக்கண் முதல்வரும் ஆகுக..நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று வாதிடுவார் நக்கீரர்,,அந்த ஞாபகம் வந்தது உடனே சுட்டிக் காட்டி விட்டேன்.
உலகில் பல பாகங்களில் வசிக்கும் காயலர்கள் ரசிக்கும் நிழல் படங்களை வழங்கி முத்திரை பதித்து வரும் சுபுஹான் பீர் முஹம்மது அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
இந்த நாள் போல் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமைய வாழ்த்துக்கள்... ....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross