ஐக்கிய அரபு அமீரகம் துபை நகரில் 15.06.2018. வெள்ளிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர் அபூதபீயிலுள்ள Grand Mosque எனும் பெரிய பள்ளியில் அன்று 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெற்றது. இதில், காயலர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நிறைவில் அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
அபூதபீயிலிருந்து...
‘நிழற்படக் கலைஞர்’ சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
|