திருச்செந்தூர் அரசு நூலகத்திற்கு, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஜூன் 18, 19, 20 தேதிகளில் - காயல்பட்டினம் நகரில், எழுத்துமேடை மையம் தமிழ்நாடு மற்றும் தம்மாம் காயல் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் காயல் புத்தகக் கண்காட்சி 2018 நடைபெற்றது.
இந்த புத்தகக் கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த புத்தகங்களில் 30 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - திருச்செந்தூர் அரசு பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இது சம்பந்தமான எளிய நிகழ்வு, நேற்று திருச்செந்தூர் அரசு பொது நூலக வளாகத்தின் பொறுப்பாளர்கள் திருமதி பரமேஸ்வரி மற்றும் திரு மாதவன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 22, 2018; 9:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|