காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், நிகழும் ஜூன் மாதம் 20ஆம் நாளன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள – பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து, இக்ராஃ கல்விச் சங்க செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.06.2018 புதன் கிழமை மாலை 07:15 மணிக்கு, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில் - இக்ரஃ கல்விச் சங்கம் எதிரிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
>> இக்ராஃவின் ஆண்டறிக்கை தாக்கல்,
>> 2017-18 பருவத்திற்கான வரவு-செலவு கணக்கு தாக்கல்,
>> 2018-19 பருவத்திற்கான பட்ஜெட் தாக்கல்,
>> புதிய உறுப்பினர்களை அங்கீகரித்தல்,
>> நடப்பாண்டுக்கான (2018-19) கல்வி உதவித்தொகை குறித்த விபரங்கள் தாக்கல்,
>> இக்ராஃவுக்கான கட்டிடப் பணிகள் குறித்த தகவல்கள் மற்றும் கலந்தாலோசனை,
>> அடுத்த பருவத்திற்கான (2018-19 & 2019-20) புதிய நிர்வாகக் குழுவை தேர்ந்தெடுத்தல்,
>> மற்றும் எதிர்கால திட்டங்கள்
உள்ளிட்ட முக்கிய பொருள்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்கக் கோரி, இக்ராஃவின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இ மெயில் மூலமும், கடிதங்கள் அஞ்சல் மூலமும், நேரடியாகவும் முறைப்படி தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் வெளிநாடுகள் / வெளியூர்களிலிருந்து நோன்புப் பெருநாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளை சார்ந்து விடுமுறையில் தாயகம் வந்துள்ள இக்ராஃ உறுப்பினர்கள், மற்றும் காயல் நல மன்ற நிர்வாகிகள் இச்செய்தியையே அழைப்பாக ஏற்று, அவசியம் கூட்டத்தில் பங்கேற்று நல்ல பல ஆலோசனைகளை வழங்கிடுமாறும், அவ்வாறு யாரும் தாயகம் வந்திருப்பதை அறிந்தவர்கள், அவர்களுக்கு இத்தகவலைத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்துகொள்ளச் செய்யுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
நிர்வாகி,
இக்ராஃ கல்விச் சங்கம், காயல்பட்டினம்.
|