காயல்பட்டினத்தில் 16.06.2018. சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளியில், அன்று காலை 09.00 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. பள்ளியின் கத்தீபும் – முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ தொழுகையை வழிநடத்தி, குத்பா உரையாற்றினார்.
இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும் – அதன் சட்டமன்றக் கட்சித் தலைவருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, ஹாங்காங் காயிதேமில்லத் பேரவை அமைப்பாளர் ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ்
|