ஜூன் 16 சனிக்கிழமையன்று நோன்புப் பெருநாள் என காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி, ஜாவியா அரபிக் கல்லூரி & நகர உலமாக்களின் – ஷவ்வால் தலைப்பிறை குறித்த கூட்டுக் கலந்தாலோசனைக் கூட்டத்தின் நிறைவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டம், இன்று (14.06.2018. வியாழக்கிழமை) 19.00 மணியளவில் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் – தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும் – காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் ஜும்ஆ பள்ளியின் கத்தீபுமான மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.
ஷவ்வால் தலைப்பிறை காணப்பட்ட தகவல் எங்கிருந்தும் பெறப்படாததால், 15.06.2018. வெள்ளிக்கிழமையன்று ரமழான் 30ஆம் நாள் என்றும், 16.06.2018. சனிக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் – நோன்புப் பெருநாள் என்றும், கூட்டத்தின் நிறைவில் அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நகரின் மார்க்க அறிஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|