காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் வேண்டுகோளை ஏற்று, அரூஸிய்யா பள்ளி அருகில் விரைவாக வேகத்தடை அமைத்த நகராட்சி ஆணையருக்கு குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அரூஸிய்யா பள்ளி சந்திப்பில் அனைத்து திசைகளிலும் செல்லும் வாகனங்கள் அடிக்கடி சிறு விபத்துகளை சந்திக்கின்றன என்ற புகார், பள்ளியில் நிறுவப்பட்டுள்ள CCTV பதிவுகளுடன் நடப்பது என்ன? குழுமத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது சம்பந்தமாக நடப்பது என்ன? குழும நிர்வாகிகள் - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களை நடவடிக்கை எடுக்க உடனடியாக தொடர்புக்கொண்டு, CCTV படங்களையும் அனுப்பிவைத்தனர். மேலும் அப்பகுதியில் உடனடியாக வேகத்தடைகள் அமைத்திடவும் கோரிக்கை வைத்தனர்.
விபரங்களை கேட்டறிந்த ஆணையர் - பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து, அப்பகுதியில் வேகத்தடை அமைத்திட தற்போது ஏற்பாடு செய்துள்ளார்.
துரிதமாக நடவடிக்கை எடுத்த ஆணையர் திரு பிரேம் ஆனந்த் அவர்களுக்கு - நடப்பது என்ன? குழுமம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஜூன் 29, 2018; 9:15 am]
[#NEPR/2018062901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|