முற்றுப்புள்ளி posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[22 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4623
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
மக்களே! தவறுகள் ஏற்பட்டால் விட்டுக் கொடுக்க பழகிக் கொள்ளுங்கள் அதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகு.
சகோதரர் ஜியாவுதீன் அவர்கள் முதலில் எழுதிய " காட்பாதர் " என்ற சொல் தவறான அர்த்தத்தில் எழுதியது அல்ல என்பது தெளிவு.
அடுத்ததாக சகோதரர் ஹசன் அவர்கள் வேண்டுகோள்படி அவசியமற்ற - மார்க்கத்திற்கு முரணான - வார்த்தைகளை எழுதுவதை பிரசுரிப்பதை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பதும் சரிதான்.
ஆனால் சகோதரர் ஹசன் அவர்கள் , வேண்டுகோளில் வல்லினம் , மெல்லினம் பார்க்கவில்லை என்று எண்ணுகிறேன்.
-------------------------------------------------
எது எப்படியானாலும் சரி நம் சகோதரர்கள் அறிந்தோ அறியாமலோ ஏதும் தவறு செய்திருப்பின் மற்றவர் அதை நாசூக்காக சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.
அந்த சுட்டிக்காட்டுதலை மற்ற சகோதரர் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு
செயல்பட்டால் இப்படி தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் நடக்காது.
செய்திக்கு அவசியமான , ஆக்கப்பூர்வமான கருத்துக்களை பகிர்ந்து நமது மன உளைச்சலை தவிர்க்கலாம்.
-------------------------------------------------
எனவே மக்களே! இத்தோடு இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு - செய்திக்கு தேவையான கருத்து பரிமாற்றங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross