செய்தி: காயல்பட்டினத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுப்பது குறித்து அனைத்து ஜமாஅத் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும்! செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...இறைவனின் திருப்பெயரால்...... posted bymackie noohu thambi (kayalpattinam )[11 August 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46248
இறைவனின் திருப்பெயரால்... அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எங்கு பார்த்தாலும் காயல்பட்டினத்திலிருந்து வெளிவரும் எல்லா துண்டறிக்கைகளிலும் அழைப்பிதழ்களிலும் தலை எழுத்தாக குறிக்கப்படும் இந்த நகரிலா போதை பொருள்.... கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஒரு காவல்துறை அதிகாரி கூறினார்.
திரையரங்கு இல்லாத ஊர்
மதுக்கடை இல்லாத ஊர்
காவல் நிலையம் இல்லாத ஊர்
என்றேல்லாம் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டு வரலாற்று சிறப்பு மிக்க ஊராக மற்ற மாவட்டங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துக் காட்டாக இருந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அவமானத்தை துடைத்தெறிய ஊர் நலம் காக்கும் நல்லவர்கள் கூடும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்ற பேரவா இருந்தாலும் தவிர்க்க முடியாத உடல்நிலை காரணத்தால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.
எல்லா மக்களின் மனத்திலும் இந்த கவலை பற்றிக் கொண்டு எரிகிறதை பார்க்கிறேன்.இது இஸ்லாமிய விழுமியங்களை தங்கள் வாழ்வியலாக கொண்டிருக்கும் நமது மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல எங்கிருந்தோ இறக்குமதியாகியுள்ள இந்த சாபக் கேட்டுக்கு நமது இளைஞர்கள் பலிகிடாவாக்க பட்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.
இளமைப் பருவம் தீமைக்கு வெகு விரைவில் அடிமையாகி விடுகிறது. மார்க்க அறிவு குன்றிப் போனதையே இது காட்டுகிறது. எல்லா பள்ளிவாசல்களிலும் மார்க்க விஷயங்களை போதிக்கும் மதராஸாக்களிலும் ஊரில் நடக்கும் எல்லா திருமண கந்தூரி சொற்பொழிவு மேடைகளிலும் இந்த இழிவை பற்றி பேச வேண்டும் சுதந்திர தின உரைகளிலும் இது இடம் பெற வேண்டும்.
நேற்று நடைபெற்ற கஸ்வா கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் சகோதரி பர்வீன் சுல்தானா அவர்கள் பதின்ம வயதினரிடம் எப்படி இந்த தீமை பற்றிக் கொள்கிறது என்று விரிவாக சொன்னார்கள். சுகந்தம் தரும் நீண்டு உயர்ந்து நின்று மணம் வீசும் சந்தன மரத்தை நச்சுப் பாம்புகள் சுற்றி பின்னிக்கொள்கின்றன என்று சொன்னார்கள்.
தீயவை தீய்மை பயக்கும் ஆதலின்
தீயவை தீயினும் அஞ்சப்படும்
என்று வள்ளுவம் சொல்கிறது.
ஒருவர் ஒரு தீய செயலுக்கு துணைபோனாலோ அல்லது அந்த தீய செயலை பரிந்துரைத்தாரோ அந்த தீமை நடக்கும் காலமெல்லாம் அந்த தீமையில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு என்று திருமறை சொல்கிறது. இந்த தீய சக்திகளை நமதூரிலிருந்து அப்புறப்படுத்த இன்று எடுக்கப் படும் எல்லா முடிவுகளுக்கும் நமதூர் மக்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டியது நமது தார்மீக மார்க்க கடமை.
நமது மண்ணின் மைந்தர் அபூபக்கர் தலைமையில் இந்த கூட்டம் கூட்டப்ப படுவது மிக பொருத்தமானது. சட்டமன்றம் வரை இந்த செய்தியை கொண்டு சென்று ஒரு அரசாணை பிறப்பிக்க கூட அவருடைய பங்களிப்பை அவர்கள் செய்ய முடியும். புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களாலும் இன்றைய ஆட்சியாளர்களாலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு தலைவராக அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள் அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு துணை நிற்பானாக ஆமீன்.
இதனை இதனால் இவண் முடிக்குமென்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross